Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனிதா நடிப்பில் வெளிவந்த படத்தில் உள்ள ‘சிவராத்திரி’ பாடலை நீக்க இளையராஜா வழக்கு

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பாடல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், இது காப்புரிமையை மீறிய செயலாகும். உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்தார்.

* நான் இளையராஜா வீட்டின் மருமகளாக போக வேண்டியவள்

வனிதா விஜயகுமாரின் ‘மிசஸ் & மிஸ்டர்’ படத்தில் ‘சிவராத்திரி’ என்ற தனது பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் பேசும்போது, “நான் நேரில் சென்று இளையராஜா அப்பாவை பார்த்து ஆசீர்வாதம் பெற்று இந்த பாடல் விஷயத்தை சொன்னேன். அதற்கு அவரும் ஓகே என்று பதிலளித்தார். இளையராஜா ஒரு லெஜெண்ட், கடவுள் மாதிரி, கடவுளே நம்மிடம் கோவப்பட்டால் என்ன செய்வது. சின்ன வயதில் அவர் வீட்டில் வளர்ந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் நாம் வீடு வாங்கி பத்திரப்பதிவு செய்கிறோம், பிறகு அந்த பூமி எனக்கு சொந்தம் என ஒருவர் வந்து வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை அந்த நிறுவனத்தின் மீது தான் கேஸ் போட வேண்டும். இதேபோல ‘குட் பேட் அக்லி’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கும் கேஸ் போட்டுள்ளார். அவர் குடும்பத்திற்காக நான் நிறைய உழைத்துள்ளேன். அந்த குடும்பத்தில் நானும் ஒருத்தி, மருமகளாக போக வேண்டியவள் நான்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.