சென்னை: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்பு திட்டச் செயலாக்க துறை ‘தூய்மை இயக்கம்’ என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த இயக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தையும் திறம்பட செயல்படுத்திட ஏதுவாக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள், ஆலோசகர்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் ஆகியோரிடம் இருந்து கழிவு மேலாண்மையில் பங்கேற்றிட தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் பங்கேற்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் https://thooimaimission.com/partnerships என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்துக்கொள்ளலாம். இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


