Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமூகப் பணியும், மக்கள் நலப் பணியும் தொடரும்: எக்ஸ் தளத்தில் ராதிகா உறுதி

சென்னை: வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூக பணியும், மக்கள் நலப் பணியும் தொடரும் என்று விருதுநகர் பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனது அரசியல் பயணத்தில் நான் முதன்முறையாக விருதுநகர் தொகுதியில் பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டதில், எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தது போல, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூகப் பணியும், மக்கள் நலப் பணியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எல்லாப் போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல, சில போர்க்களத்தில் யாரோ ஒருவர் இருந்ததாக உலகுக்குச் சொல்லுவதற்காகப் போராடுகிறார்கள். இது நான் படித்த ஒரு மேற்கோள். இவ்வாறு ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.