Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

*திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சிவகிரி : சிவகிரி அருகே கூடலூரில் உள்ள நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலையில் பாலசுப்பிரமணியர், விநாயகருக்கு 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் வள்ளி, தெய்வானை, பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 2ம் ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேருக்கு முன்பாக விநாயகர் ரதம் சென்றது.தேரோட்டத்தை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் பொன்முத்தையா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நாதகிரி பாலசுப்பிரமணிய அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் சுந்தர், செயலாளர் ஜோதி முத்துராமலிங்கம், பொருளாளர் வலங்கைபுலி, கோயில் செயல் அலுவலர் சாலை லட்சுமி, தக்கார் கார்த்திகை லட்சுமி, கூடலூர் ஊர்த் தலைவர் குருசாமி பாண்டியன், துணைத்தலைவர் வெள்ளத்துரை, பொருளாளர் வெங்கடேஸ்வரன், கணக்கர் இசக்கித்துரை, வீரபுத்திரன், திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன், கவுன்சிலர் அருணாதேவி, மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் பொன்ரமேஷ், மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

தேரோட்டம் நிலையம் சென்றடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருத்தேர் உபயதாரர் ஆதிவித்யா ஆஷ்டகாயன் அறக்கட்டளையினர், கூடலூர் ஊர் பொதுமக்கள் மற்றும் நாதகிரி பாலசுப்பிரமணிய அன்னதான அறக்கட்டளையினர் செய்து இருந்தனர். வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கருப்பையா, முருகன், மாடசாமி உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.