Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சில்லி பாயிண்ட்

* இந்திய அணி நட்சத்திரம் விராத் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி (இலங்கையுடன் ஒருநாள் போட்டி, தம்புல்லா 2008 ஆக.18) நேற்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் இதுவரை 113 டெஸ்டில் 8848 ரன், 295 ஒருநாளில் 13,906 ரன், 125 டி20ல் 4188 ரன் குவித்துள்ளார்.

* பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி (ஆக. 30 - செப். 3) கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட்டின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, 2027 மார்ச்சில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.