Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்...

* ஐசிசி-ன் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் கொழும்புவில் நேற்று தொடங்கியது (3 நாள்). புதிய நிர்வாகிகள் தேர்தல் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை, முடிவுகளை உள்ளடக்கிய இக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை ஆட்டங்களுக்கு திட்டமிட்டதை விட அதிகம் செலவு செய்தது, சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டேடியம் கட்டியது, அதனால் 2 ஐசிசி அதிகாரிகள் ராஜினாமா மற்றும் 2025 பிப்., மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

* இலங்கை யு-19 அணியுடன் நடந்த செல்டன்ஹாமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து யு-19 அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் இலங்கை யு-19 அணி 153 ரன்னுக்கு சுருண்ட நிலையில் இங்கிலாந்து யு-19 அணி 477 ரன் குவித்தது. இலங்கை யு-19 2வது இன்னிங்சில் 271 ரன்னுக்கு ஆல் அவுட். இந்த போட்டியில் அறிமுகமான முன்னாள் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் மகன் ராக்கி பிளின்டாப் (16 வயது) சதம் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

* ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆல் ரவுண்டர் சோபி மோலினியூக்ஸ் பயிற்சியின்போது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதை அடுத்து, அவர்  8 வாரத்துக்கு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* மே, 2020ல் செர்பியா மாடல் நடாஷா ஸ்டோகோவிச்சை மணந்த ஹர்திக் பாண்டியா, தங்களின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘4 ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு, நானும் நடாஷாவும் பேசிப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். எங்களால் முடிந்த சிறந்தவற்றை செய்தோம். இந்த முடிவு எங்கள் இருவருக்கும் நல்லது என்று நம்புகிறோம். கடினமான முடிவு இது. எங்களுக்கு அகஸ்தியா என்ற பேரன்பு கிடைத்தது. அவன் எங்கள் வாழ்க்கையின் மையமாக எப்போதும் இருப்பான். அவனுடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்க நாங்கள் ஒத்துழைக்கவும் முடிவு செய்திருக்கிறோம். தனிப்பட்ட இந்த முடிவை புரிந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.