மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் படம் ‘கிங்’. இதில் முக்கிய வேடத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்கிறார். மும்பையில் நடந்த இதன் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் விபத்து ஏற்பட்டு, ஷாருக்கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். ஷாருக்கான் தற்போது தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஓய்வெடுக்க இருக்கிறார். ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு பெரிய விபத்து இல்லை. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்று ஷாருக்கானின் செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2002ல் ‘சக்தி’ என்ற படத்தில் நடிக்கும்போது முதுகு தண்டுவடத்தில் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.