சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இரு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து, சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதாக புகார். ஒவ்வொரு வார இறுதி நாளிலும், தொடங்கும் நாளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திப்பதாக வேதனை. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement