சென்னை: மதுரையில் வரும் 8ம் தேதி மாலை 4 மணிக்கு, பாண்டியன் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் “மதச்சார்பின்மை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். இதில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மாரியப்பன்-மதிமுக சார்பில் வழக்கறிஞர் இரா.செந்தில் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ்.பாரதி-இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வழக்கறிஞர் கே.கே.சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் த.பார்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள். கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


