Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்பி எடுக்க முயன்ற போது விபரீதம் தூவல் நீர்வீழ்ச்சியில் சிக்கிய இளைஞர் மீட்பு

மூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டம் பகுதியில் உள்ளது தூவல் நீர்வீழ்ச்சி. இங்கு கேரளா தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நீர்வீழ்ச்சியில் மழைக்காலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் கான்போரின் மனதை வெகுவாக கொள்ளை கொள்ளும்.

அதே நேரம் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளில் இளைஞர்கள் சிலர் சென்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுப்பதை சாகசமாக எண்ணுகின்றனர்.ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் சில நேரங்களில் ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மதுரையில் இருந்து நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் நேற்று முன்தினம் இடுக்கிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காலையில் ராமக்கல் மேடு பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு மாலை தூவல் நீர் வீழ்ச்சி காண சென்றுள்ளனர்.

நீர்வீழ்ச்சியின் அருகே சென்ற இளைஞர்களில் ஒருவர் தண்ணீர் பாய்ந்து செல்லும் பாறை இடுக்குகளில் இறங்கி செல்பி எடுக்க முயன்றார். இதனிடையே அந்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மரத்தடியை பிடித்துக் கொண்டு உயிர்த்தப்பினார். இதைக் கண்ட கூட்டத்தில் இருந்த சக இளைஞர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர்.

பாறை இடுக்கில் சிக்கி இருந்த அந்த இளைஞனின் உடலில் கயிறு கட்டி மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர்.தற்போது தூவல் நீர்வீழ்ச்சியில் சிக்கிய இளைஞனை மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த நீர்வீழ்ச்சியில் சிக்கி 12 உயிர்கள் பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.