அகர்தலா: திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் கும்பல் ஊடுருவ முயன்றது. வங்கதேசத்தை சேர்ந்த 20 முதல் 25 பேர் கொண்ட வங்கதேச கடத்தல் கும்பல் கலம்சவுரா காவல்நிலையத்தின் கீழ் உள்ள புடியாவில் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய கூட்டாளிகளை சந்தித்துள்ளது. இவர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் இவர்கள் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்களின் தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Advertisement