சென்னை: ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ்களில் பின்புறத்தில் கட்டண பாக்கியை குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சான்றிதழில் கட்டண பாக்கியை குறிப்பிடும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 'கட்டண பாக்கி உள்ளது' என சான்றிதழில் குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
+
Advertisement