ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி.
சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று ராயபுரம் மண்டலம், வார்டு- 59க்குட்பட்ட எல்லிஸ் புரம் பகுதியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் ரூ 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று (11.06.2024) ராயபுரம் மண்டலம், வார்டு- 59க்குட்பட்ட எல்லிஸ் புரம் பகுதியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் ரூ 1.62 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய ஆறு வகுப்பறைகளைக் கொண்ட புதிய சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டாரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.