சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்ததில் 23 பேர் காயம்: 3 பேர் கவலைக்கிடம்
சவூதி அரேபியா: சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்ததில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர் மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், '360 டிகிரி சவாரி' செயல்பாட்டில் இருந்தபோது தரையில் சரிந்து விழுந்தது. சுமார் 40 பேர் பயணித்த ராட்டினம் திடீரென வேகம் அதிகரித்து ராட்டினத்தின் மையக் கம்பம் பாதியாக உடைந்தது.
விபத்தில் 23 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.இதற்கிடையில், சவாரி பழுதடைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர விசாரணை நடத்தி வருகின்றனர்.