வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது.வேதாரண்யம் பகுதியில் திடீரென நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க 15 நாட்களாகும். இதனால் உப்பு விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.