Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகே பட்டாசு குடோனில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்த அரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கோமாளிவட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது.

இவர் உரிமம் பெற்று விதிமுறைகளின்படி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள தோட்டத்தில் பட்டாசு ஆலை அமைத்து பட்டாசு தயாரித்தல், தயாரித்து வைத்த பட்டாசுகளை சேமித்து வைக்க கிடங்குகளை அமைத்துள்ளார். இந்த கிடங்கில் வழக்கமாக 12க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிப்பதற்காக சிவகாசியிலிருந்து மருந்து மூட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மருந்து மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மருந்து மூட்டை தவறி விழுந்து உரசியதில் அந்த பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது.

ஒரு மூட்டை வெடித்ததும் அருகாமையில் இருந்த மற்ற மூட்டைகள், அங்கிருந்த கிடங்குகளுக்கு தீ பரவி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயராமன் உள்ளிட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் உயிரந்தார்.

காயமடைந்த மீதமுள்ள முத்துக்குமார், சுரேஷ், கார்த்தி ஆகிய 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததை அடுத்து தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

அதே போல் இந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் உரிமம் பெற்று ஜெயக்குமார் ஆலையை நடத்திவந்தது தெரியவந்தது. மேற்கொsண்டு விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.