Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்கள் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது : புதிய நிபந்தனைகள் வெளியீடு!!

டெல்லி : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய நிபந்தனைகள் என்னென்ன ?

*3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள்.

*ரூ.50,000-க்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் திட்டத்தில் பயன்பெற முடியாது.

*வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் திட்டத்தில் பயன்பெற இயலாது.

*வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

*பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வதி இல்லாத 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.

*செங்கல் சுவர்கள், கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.