பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில், வரும் 24ம் தேதி முதல், அக். 5ம் தேதி வரை சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கு பெறுவதாக இருந்த, பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத துவக்கத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி, சபலென்கா சாம்பியன் பட்டம் பெற்றார். அந்த போட்டியின்போது சபலென்காவுக்கு ஏற்பட்ட காயத்தால் சீன ஒபனில் அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
+
Advertisement