மாஸ்கோ: ரஷ்யாவில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய். வயது 53. இவர் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஆண்ட்ரி நிகிடினை, தற்காலிக போக்குவரத்து அமைச்சராக அதிபர் புடின் நியமித்தார். ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமைச்சர் ஸ்டாரோவாய்ட்டின் பதவி நீக்கம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் புல்கோவோ பகுதிகளை குறிவைத்து உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதால் அந்த நகரங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.டிஸ்மிஸ் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ரஷ்ய போக்குவரத்து அமைச்சராக இருந்த ரோமன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


