Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது..!!

சேலம்: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு பிடிஎம் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் தீபக் திலக் என்பவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளார். கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 3000 பேரிடம் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து முதலீடு செய்தவர்களுக்கு முதலில் சில மாதங்கள் மட்டும் பணத்தை திருப்பி தந்த நிலையில் மோசடி அரங்கேற்றம் செய்துள்ளார்.