ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்!
சென்னை: ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதிசெய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு ரோப் வே அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


