Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி சக்திகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பகவதியப்பன். இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில், பகவதியப்பனும், அவருடைய மனைவியும் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவரும் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு . நேற்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போதும் மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, பகவதியப்பன் மட்டும் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். ஏனெனில் வீட்டில் அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்ததுடன், பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை உணர்ந்துகொண்ட பகவதியப்பன், உடனடியாக சென்று மாடியில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் இருக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால் சுவரோடு பொருத்தியிருந்த லாக்கரை மர்ம கும்பல் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். அதில் சுமார் 200 சவரன் நகை மற்றும் ரூ. 12 லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாயை வரவழைத்து விசாரணையை தொடங்கினர். அதில், கீழ் அறையில் பிரோவில் பணம் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் , அதன்பின்னரே மாடியில் இருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதனை சுவற்றில் இருந்து பெயர்த்து எடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.