புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.லட்சுமிகாந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.லட்சுமிகாந்த ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகளில் ஒழுங்குபடுத்துதல், வங்கிகளின் மேற்பார்வை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சென்னை ரிசர்வ் வங்கியில் வங்கி குறைதீர்ப்பாளராகவும், லக்னோவில் உத்தரப் பிரதேசத்தின் மண்டல இயக்குநராகவும் பணியாற்றினார்.
பல குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்ட ஆர்.லட்சுமிகாந்த ராவ், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன், தகவல் உரிமைச் சட்டம் (எப்ஏஏ), தகவல் தொடர்புத் துறை ஆகியவற்றைக் கவனிக்க உள்ளார். வர்த்தகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் நிதித் துறையில் முதுகலைப் பட்டமும், ஐஐபிஎப்-யில் டிப்ளமோவும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.