டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இம்முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பப்பட்டுள்ளது.
+
Advertisement


