புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் கடந்த 7ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நாணயக் கொள்கை முடிவுகள் தொடர்பான அறிக்கையை நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. தொடர்ந்து 10வது முறையாக எவ்வித மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகத் தொடர முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 10வது முறையாக ரெப்போ வட்டி மாற்றப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையாது. நீண்ட காலமாக வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையாமல் இருப்பதும் சாமானிய மக்களுக்கு சுமைதான் என பொருளாதா நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்க விகிதம் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.