மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் கடந்த 4ம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஐகோர்ட் மதுரை கிளை, ஆர்ப்பாட்டத்தில் ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது.
ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்று பேசினார். அப்போது அவர், இரு பிரிவினரிடையே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது சுப்ரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


