சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார்(திமுக) பேசுகையில், விதிமுறைகளை மீறி இயங்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பலமுறை நேரடியாக கடிதம் வழங்கியிருக்கிறோம். உள்ளூர் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் “ என்றார்.
Advertisement