சிவப்பு அரிசி, ஆவாரம் பூ லட்டு, தேங்காய் பால் முறுக்கு... மகளிர் சுய உதவி குழு தயாரிக்கும்‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ ரெடி
சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தீபாவளியை முன்னிட்டு பல்வேறு இனிப்பு, கார வகை தின்பண்டங்களைக் கொண்ட ’மதி தீபாவளி பரிசுப் பெட்டகம்’ இணையதளம் மற்றும் கைபேசி எண் வாயிலாக மொத்தம் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் சிவப்பு அரிசி லட்டு, உலர்பழங்கள் லட்டு, ஆவாரம் பூ லட்டு ஆகிய லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் வருகிற 23ம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவையான பொருட்கள் வாங்க முன்பதிவு செய்திட 76038 99270 என்ற எண்ணை தொடர்புகொள்ளாம். வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள, மதி அனுபவ அங்காடியையும் தொடர்புகொள்ளலாம்.


