சாதனை அடிப்படையில் ஐசிசி தேர்வு: உலகக்கோப்பை சிறந்த அணியில் மந்தனா, ஜெமிமா, தீப்தி; லாரா உல்வார்ட் கேப்டன்
லண்டன்: மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி உருவாக்கிய அணியில் இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா ஆகிய 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இந்தியா, இலங்கை நாடுகளில் நடந்தன. இத்தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை அபாரமாக வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை தேர்வு செய்து சிறந்த கிரிக்கெட் அணி ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உருவாக்கி உள்ளது. அந்த அணியில் இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா ஆகிய 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு, தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் லாரா உல்வார்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள்: லாரா உல்வார்ட் (கேப்டன்- தென் ஆப்ரிக்கா), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி சர்மா (இந்தியா), மாரிசான் காப் (தென் ஆப்ரிக்கா, ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), நாடின் டிகிளெர்க் (தென் ஆப்ரிக்கா), சிட்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர், பாகிஸ்தான்), அலானா கிங் (ஆஸ்திரேலியா), சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), நாட் சிவர்பிரன்ட் (12வது வீராங்கனை, இங்கிலாந்து).


