தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், யாரும் சிக்கவில்லை. இதையடுத்து, போலீசார் 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பட்டறைவாக்கத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement