Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரத்தன் டாடா மறைவிற்கு பிறகு டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா ஒருமனதாகத் தேர்வு

மும்பை: டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்த ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதற்கிடையே டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நமது நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவுக்கு கடந்த திங்கள்கிழமை திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த புதின் இரவு உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே ரத்தன் டாடா விலகி இருந்தாலும், டாடா அறக்கட்டளையின் தலைவராக அவரை தொடர்ந்து வந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து இப்போது நோயல் டாடா புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் தந்தை நேவல் ஹெச் டாடாவின் இரண்டாவது மனைவியின் மகன் தான் இந்த நோவல் டாடா. ரத்தன் டாடாவுக்கு பிறகு இவரே டாடா அறக்கட்டளையின் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியே நடந்துள்ளது. ரத்தன் டாடாவும் கூட இவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் குழுவில் அறங்காவலராக உள்ளார். தற்போது​​நோயல் டாடா, டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். மேலும், அவர் ஜூடியோ மற்றும் வெஸ்ட் சைட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ட்ரெண்டின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.