Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களை சிறை பிடிப்பது மட்டுமின்றி, படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது போன்ற பல்வேறு அட்டுழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.