ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெரால்ட்(33). தேவிபட்டினத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்னையால் ஜெரால்டும், அவரது மனைவியும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி ஜெரால்ட், சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் திடீரென மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார். தலை மற்றும் காலில் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement