மாநிலங்களவையில் எதிர்க்கட்சி போராட்டம் நடத்தும்போது சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்களை அனுமதித்ததற்கு கார்கே கண்டனம்..!!
டெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி போராட்டம் நடத்தும்போது சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அனுமதித்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவை நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிணற்றில் போராட்டம் நடத்தினர். அதனை தடுத்து நிறுத்தும் விதமாக சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வைத்தமாக மாநிலங்களவை மையப்பகுதிக்கு தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை அனுமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என கார்கே மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு கடிதம் அளித்துள்ளார். அதில்,
துணைத் தலைவர் அவர்களே,
ராஜ்யசபாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பாகவும் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, CISF பணியாளர்கள் அவையின் மையப்பகுதிக்குள் ஓட வேண்டிய விதம் எங்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. நேற்றும் இன்றும் இதைக் கண்டோம். நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இது மிகவும் ஆட்சேபனைக்குரியது, இதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். உங்கள் உறுப்பினர்கள் பொது மக்களின் முக்கிய பிரச்சினைகளை எழுப்பும்போது, எதிர்காலத்தில் CISF பணியாளர்கள் அவையின் மையப்பகுதிக்குள் படையெடுக்க வரமாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.