சென்னை: வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்பனையின் வெற்றி சின்னத்தை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். யாருக்காக அழுதான் புத்தகத்தில் ஜெயகாந்தனின் எழுத்து வியப்பை அளித்தது. ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்துள்ளேன்.
புத்தகத்தை பற்றி பேச சிவக்குமார், கமல்ஹாசன் இருக்கின்றனர்; என்னை ஏன் அழைத்தார்கள். 70 வயதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டு நடக்கும் என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை. அனுபவம் உள்ளவர்கள்தான் இயக்கத்தின் தூண்கள் என சொல்ல வந்தேன். எனக்கும் ஓய்வுக்குப் பிறகு புத்தகங்களை படிக்க விருப்பம்.
கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி.. அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். . HATS OFF.. உங்க காலில் விழுந்து வணங்குறேன் என்று கூறினார்.