Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாதனையாளர் விருது பெற ரஜினிகாந்த் கோவா பயணம்: மனைவி, மகளுடன் பங்கேற்பு

மீனம்பாக்கம்: கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று, திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதை பெறுவதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதே விமானத்தில் நடிகை நயன்தாராவும் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுள்ளார். கோவாவில் கடந்த 20ம் தேதி துவங்கிய சர்வதேச திரைப்பட விழா, இன்று (28ம் தேதி) நிறைவு பெறுகிறது. இன்று மாலை, இந்திய நாட்டின் முன்னணி திரை கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், திரைத்துறையில் 50ம் ஆண்டு நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக, நேற்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கோவாவுக்குப் புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்-2 படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கோவாவில் நடைபெறும் சர்வசேத திரைப்பட விழாவில், எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கின்றனர். அதற்காக நான் கோவாவுக்கு குடும்பத்துடன் செல்கிறேன். உங்களின் ஆசீர்வாதத்துடன் நான் இன்னும் சூப்பர் ஸ்டாராக தொடர்கிறேன். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததை பற்றி ரஜினியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘நோ காமெண்ட்ஸ்’ என்று சிரித்தபடி விமான நிலையத்துக்குள் புறப்பட்டு சென்றார்.

இதே விமானத்தில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நடிகை நயன்தாராவும் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்துக்கு தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வந்திருந்த நடிகை நயன்தாரா, விமானநிலைய நுழைவு வாயிலில் தனது கணவரை கட்டி அணைத்து முத்தமிட்டு உள்ளே சென்றார்.