Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தான் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் புஷ்கர் கண்காட்சி: பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 1,500 கிலோ எடை எருமை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்று வரும் புஷ்கர் கண்காட்சியில் 1500 கிலோ எடை கொண்ட எருமை மாடு, ஒட்டகம் நடனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ராஜஸ்தானில் புஷ்கரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமாண்ட கலை கண்காட்சியில் ராஜஸ்தான் மாநில கலை நிகழ்ச்சிகள் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். முக்கியமாக ஒட்டகங்கள், குதிரைகள், கால்நடைகளின் கண்காட்சி மிகவும் புகழ்பெற்றது.

கட்சியில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஹரியானவை சேர்ந்த அன்மோல் எருமை மாடு ஈர்த்தது. கருகருவென, வனப்புடனும் 8வயதே நிரம்பிய எருமை 1500 கிலோ எடை கொண்டுள்ளது. சுமார் 23 கோடி ரூபாய் வரை கொடுத்து எருமையை வாங்க பலர் அணுகியும் விற்க சம்மதிக்கவில்லை என அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் பால் சுரக்கும் அன்மோல் எருமைக்கு வழக்கமான தீவனங்களுடன், பழங்கள், முட்டை, சோயா உள்ளிட்ட சத்தான பொருட்களே உணவாக கொடுக்கப்படுகிறது. இதற்காக தினமும் 1500 ரூபாய் வரை செலவிடப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

இதேபோல கண்காட்சியின் மற்றொரு ஈர்ப்பாக ஒட்டக நடனம் விளங்குகிறது. நாட்டிய பெண்களை போல ஒட்டகங்கள் கயிற்று காட்டிலும், தளத்திற்கு ஏற்ப முன்னகால்களை மாற்றி மாற்றி மேலே உயர்த்தி நடனம் ஆடியது பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. இதேபோல குதிரை ஆட்டமும் பார்வையாளர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் உற்சாக பெருக்குடன் நடந்தது. அழகும், கம்பீரமும் ஒருங்கே பொருந்திய வெண்ணிற குதிரை நடனம் ஆடியது அனைவரும் கவர்ந்தது. கண்காட்சிக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒட்டக ஆட்டத்தை படம் பிடித்தனர். உலகம் முழுவதும் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புஷ்கர் கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.