Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை : தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைப்பு!!

கோவை : வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோவை ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன"இவ்வாறு தெரிவித்தார்.