புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


