Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதச்சத்து அடங்கிய உணவு தொகுப்பு

சென்னை: சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், 2025-26 மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

100 மிலி பால், 2 முட்டை, கருப்பு/வெள்ளை சுண்டல், 20 கிராம் எடையுள்ள 3 பிஸ்கட், புரதம் 27 கிராம்/400 கிலோ கலோரி ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராம், மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.