Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை! சமரசம் செய்து கொண்டதால் நடிகை திரிஷாவின் வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: மதில் சுவர் பிரச்சனையில் சமரசம் செய்து கொண்டதாக நடிகை திரிஷா தகவல் தெரிவித்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கை முடித்து வைத்த நீதிபதி நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, நடிகை திரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை திரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும், பிரச்னை இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, நடித்த திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.