கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடந்த பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் இன்று காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தை அடுத்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சிதம்பரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி - தாம்பரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்றது. குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


