தானே: மும்பை அடுத்த தானேவில் உள்ள தனியார் பள்ளியில் 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவிகளை கழிவறையில் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை செய்துள்ளனர். கழிவறையில் ரத்தக் கறை இருந்ததை பார்த்து, மாணவிகளை கூட்ட அரங்கத்திற்கு அழைத்து வந்து, யாரது என ஆசிரியர் கேட்க, யாரும் பதில் கூறாததால் இவ்வாறு செய்துள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.
Advertisement


