தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை: கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் C மற்றும் D கிரேடு பணிகள் கன்னடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் கன்னட நிலத்தில் வேலைவாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம். அவர்களின் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.