Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு

லால்குடி: மருதூர் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக புள்ளம்பாடி பிடிஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவர்களின் பெயர்களில் வீடுகள் ஒதுக்கியும் முறைகேடு நடந்துள்ளது. இவ்வாறு சுமார் 70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறிழைத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறைகேடு நடந்ததாக கூறப்படும் 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வருபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த 30ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* டிஆர்ஓ, தாசில்தார் பணியிடை நீக்கம்

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த சிறப்பு பிரிவு உருவாக்கி தனி மாவட்ட வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ.) அனிதா தலைமையில் தாசில்தார் பர்சானா, சர்வேயர்கள் பணியாற்றி வந்தனர். அதன்படி, கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. நில உரிமையாளர்களில் ஒருவர் தன்னுடைய நிலத்தின் மதிப்பு அதிகம் எனபதால் கூடுதல் தொகை வழங்ககோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நில உரிமையாளர் ஒருவர் கோரிய இழப்பீடு தொகை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு தொகை விடுவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. நில உரிமையாளர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். உடனே, அரசு பெயருக்கு நில உரிமையை மாற்றி, பத்திரப்பதிவு செய்யாமல் அதன் உரிமையாளருக்கு ரூ.10 கோடி ரூபாய் வழங்கி விட்டதாக தெரிகிறது. இதற்காக தாசில்தார் பர்சானாவை சஸ்பெண்ட் செய்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். இந்தநிலையில் அனிதா நேற்று முன் தினம் பணி ஓய்வுபெறும் முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.