Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடி-நியூசி.பிரதமர் தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி: : மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தொலைபேசி மூலமாக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியா-நியூசிலாந்து உறவானது ஜனநாயக மதிப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான நெருங்கிய உறவுகளில் ஆழம் பெற்றுள்ளது.

வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, கால்நடை வளர்ப்பு, மருந்து, கல்வி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தில் புலம்பெயர் இந்தியர்களின் நலன்களை கவனித்துகொண்டதற்காக அந்நாட்டு பிரதமர் லக்சனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.