Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் பதவியின் மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டார்: மன்மோகன் சிங் கடும் கண்டனம்

டெல்லி: பிரதமர் பதவிக்குரிய மாண்பை நரேந்திர மோடி சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; பிரதமர் அலுவலகத்தின் தகுதியையும் முக்கியத்துவத்தையும் மோடி மலினப்படுத்திவிட்டார். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வெறுப்பு பேச்சையே மோடி பேசி வருகிறார். மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் உள்ளது. இதற்கு முன்பு எந்த பிரதமரும் மோடியை போல வெறுப்பு பேச்சையோ, தரமற்ற உரையையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை.

குறிப்பிட்ட சமுதாயத்தினரையும் எதிர்க்கட்சிகளையும் தரம் தாழ்ந்த முறையில் மோடி விமர்சித்து வருகிறார். தனது வாழ்க்கையில் சமூகங்களுக்கு இடையில் எந்த பாகுபாட்டையும் தான் காட்டியதில்லை என்று மோடி பேச்சுக்கு மன்மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். பஞ்சாபில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியால்தான் ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டம் பாதுகாக்கப்படும். நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் கவனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.