Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போப்பிற்கு 5வது வாரமாக சிகிச்சை

ரோம்: கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14ம் தேதி ரோமில் உள்ள ஜெமெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரட்டை நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிக்சை அளித்து வந்தனர். முதல் மூன்று வாரங்கள் சுவாச கோளாறு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் கடுமையான இருமல் உள்ளிட்டவற்றினால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. போப் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் போப் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது வயது முதிர்வு, பலவீனம் உள்ளிட்ட காரணங்களினால் அவரது உடல்நிலை சிக்கலானதாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் தவக்கால பிரார்த்தனையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டார். இதனிடையே போப் குறித்து வாடிகன் வெளியிட்டு வரும் அன்றாட அறிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போப் சிகிச்சையின் ஐந்தாவது வாரம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது.