புனே : போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில், மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன் வேதாந்த் அகர்வாலின் தாய் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டார். விபத்தில் தொடர்புடைய தனது மகனின் ரத்த மாதிரியை மாற்றி வைத்து, தனது மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக சான்று பெற்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் ஷிவானி. இவ்வழக்கில், ஏற்கனவே சிறுவனின் தந்தை, தாத்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தாயும் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement