திருவள்ளுர்: பொன்னேரி தொகுதியில் உள்ள கிராமங்களில் புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி பேருந்து சேவை தொடங்க வலியுறுத்தல். அமைச்சர் சிவசங்கரிடம் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கோரிக்கை மனு அளித்தார். பழவேற்காடு, கடப்பாக்கம், தத்தமஞ்சி, காட்டூர், மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை வைத்தார். ஜூலைக்குள் புதிய பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
Advertisement


